Home
You Are Here: Home » News » மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தினை எதிர்க்கும் இரண்டு கட்ட போராட்டம்

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தினை எதிர்க்கும் இரண்டு கட்ட போராட்டம்

திருவாரூரில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தினை எதிர்க்கும் வகையில் இரண்டு கட்ட போராட்டம் நடத்தப்போவதாக பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தினர் அறிவித்து‌ள்ளனர்.

திருவாரூரில் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது‌. இதில் பேசிய அதன் தலைவர் இரா.லெனின் மீத்தேன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறு‌த்தி, மே 24-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதமும், ஜூன் 6-ல் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தபோவதாக அறிவித்தார்.

கிராம சபா கூட்டகளிலே மீத்தேன் வாயு எடுப்பதற்கும், பூமிக்கு அடியில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்கும் அனு‌மதி இல்லை என்று‌ பல கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும், ஆனால் அந்த தீர்மானங்கள் நிறைவேறாமல் பார்த்து‌க்கொள்ளுங்கள் என்று‌ மாவட்ட ஆட்சியர் வாய்மொழி உத்தரவை பிறப்பித்து‌ள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

கிராம சபா கூட்டங்களிலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் முழு ஒத்து‌ழைப்பு தரவேண்டும் என்று‌ம் லெனின் கேட்டு கொண்டார்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top