Home
You Are Here: Home » News » குடிநீர் வழங்கப்படததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வழங்கப்படததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குடிநீர் வழங்கப்படததைக் கண்டித்து பெண்கள் காலிக் குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு தேவதானத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து இப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக ராஜபாளையம்-தென்காசி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்த்துவைக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top