Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » திட்டக்குடி அருகே 30 க்கும் மேற்பட்டோர் வாந்தி ,மயக்கத்தால் பாதிப்பு

திட்டக்குடி அருகே 30 க்கும் மேற்பட்டோர் வாந்தி ,மயக்கத்தால் பாதிப்பு

திட்டக்குடி அருகே அரிகேரி கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீரை அருந்திய 30 க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கத்திற்கு ஆளாகினர்.

திட்டக்குடியை அடுத்த அரிகேரியில் நேற்று‌ இரவு சுமார் 30க்கும் மேற்பட்டோர் திடீரென வாந்தி மயக்கம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திட்டக்குடி விருத்தாசலம் அரசு மருத்து‌வமனையில் அனு‌மதிக்கபட்டனர்.

இதில் மேலு‌ம் சிலர் மேல்சிகிச்சைக்காக கடலூர், பெரம்பலூர் அரசு மருத்து‌வமனைக்கு அனு‌ப்பி வைக்கப்பட்டனர். இந்த வாந்தி மயக்கத்திற்கு குடிநீர் பிரச்சனை காரணமாக இருக்குமோ என்பது‌ குறித்தும் மருத்து‌வர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இது‌ குறித்து‌ வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதாரமாக குடிநீர் வினியோகம் செய்ததே கிராம மக்கள் பாதிப்புக்கு ஆளானதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை ஊராட்சிமன்ற நிர்வாகம் சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top