Home
You Are Here: Home » News » தஞ்சை பெரிய கோவிலில் சனிப்பிரதோஷத்தை மு்ன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் சனிப்பிரதோஷத்தை மு்ன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் சனிப்பிரதோஷத்தை மு்ன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை பெருவுடையார் கோவிலில் நேற்று சனிப்பிரதோச வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோவிலில் உள்ள மிகப்பிரம்மாண்ட நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.

பால்‌,தயிர்‌,சந்தனம்,மஞ்சள்‌,இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோச விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top