Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » நாகையில் அரசு மருத்துவமனைக்குள் அதிமுகவினரின் காரை அத்துமீறி ஓட்டிச்சென்றதால் பரபரப்பு

நாகையில் அரசு மருத்துவமனைக்குள் அதிமுகவினரின் காரை அத்துமீறி ஓட்டிச்சென்றதால் பரபரப்பு

நாகையில் அரசு மருத்துவமனைக்குள் அதிமுகவினரின் காரை அத்துமீறி ஓட்டிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அதேபோல நேற்று அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்வதற்காக வெளியே உள்ள இருக்கையில் நோயாளிகள் காத்து இருந்தனர். மாவட்ட ஆட்சியர் முனுசாமியும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்..

அப்போது அதிமுக பிரமுகரின் கார் ஒன்று மருத்துவமனைக்குள் அதிவேகமாக நுழைந்து அவசர சிகிச்சை பிரிவுக்குள் புகுந்து நின்றது. இதைப்பார்த்த அங்கிருந்த நோயாளிகள் அதிரச்சி அடைந்து பயத்தில் சிதறி ஓடினர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த திடீர் பரபரப்பை தொடர்ந்து, அங்கிருந்த நோயாளிகள் அதிமுகவினரின் காரை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து அதிமுக பிரமுகரின் கார் ஓட்டுனர் ஜெயராஜை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக நாகை அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top