Home
You Are Here: Home » Cinema » தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் தேர்தல் புறக்கணிக்கப்பு

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் தேர்தல் புறக்கணிக்கப்பு

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக உள்ள கல்யாணின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி இன்று புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

சுழற்சி முறையில் இந்த முறை கேரள சினிமாத்துறையினர் தலைவராக வேண்டும் என்பதால், அம் மாநில திரைப்பட தயாரிப்பாளர்கள், வர்த்தக சபை சங்கத்தினர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஆகியோர், செவன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் விஜயகுமாரை, தலைவராக நிறுத்தியுள்ளனர்.

ஆனால், அவருக்கு போட்டியாக சசிகுமார் என்ற மற்றொரு கேரள தயாரிப்பாளரை நிறுத்தி, பிராக்சி முறை மூலம் அவரை வெற்றி பெற வைக்க கல்யாண் முயற்சிப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் இன்று நடைபெறும் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற வாய்ப்பில்லை என்பதால் அதனை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதேபோல் தமிழக திரைப்பட விநியேகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கேரள வர்த்தக சபை சங்கமும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

இதன்காரணமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது. .

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top