Home
You Are Here: Home » News » திருப்பூ அதிமுக மேயர் சகோதரி வீ்ட்டிற்கு குடிநீர் சப்ளை – பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்

திருப்பூ அதிமுக மேயர் சகோதரி வீ்ட்டிற்கு குடிநீர் சப்ளை – பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர்

திருப்பூரில் அதிமுக மேயர் சகோதரியின் வீ்ட்டிற்கு குடிநீர் சப்ளை செய்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மருதப்பநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.. இப்பகுதியில் கடந்த ஒருமாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்..

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருப்பூர் மேயர் விசாலாட்சியின் சகோதரி வீட்டிற்கு குடிநீர் சப்ளை செய்த லாரியை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. மேலும் தங்கள் பகுதியில் மின்விளக்கு மற்றும் சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடியில் கடந்த 50 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீலப்பாடி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top