Home
You Are Here: Home » News » திமுக-அதிமுக-வினரிடையே மோதல்

திமுக-அதிமுக-வினரிடையே மோதல்

நெல்லை பொட்டல்புதூர் அருகே திமுக-அதிமுக-வினரிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட இரண்டு பேர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டல்புதூர் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியை சேர்ந்த 240 பேர் இந்த வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலத்த வரிசையில் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் அசன் பக்கீர், வாக்காளர்களிடம் அதிமுக-வின் சின்னமான இரட்டை இலையை சைகையில் காட்டியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் திமுக ஒன்றியச் செயலாளரின் சகோதரர்கள் வெள்ளைத்துரை, சிங்கத்துரை ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மேலும் இந்த மோதலில்‌ இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top