மாஜிஸ்திரேட், தாசில்தார் உள்ளிட்ட அரசு உயர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடாகும்
மாஜிஸ்திரேட், தாசில்தார் உள்ளிட்ட அரசு உயர் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1870 கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னையில் உள்ள அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முக கலந்தாய்வு நடைபெற்றது.
தேர்வாணைய தலைவர் நட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்கு வேண்டிய பகுதிகளை ஆர்வத்துடன் கேட்டுப் பெற்றனர்.
கலந்தாய்வுக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நட்ராஜ், மாஜிஸ்திரேட், தாசில்தார் உள்ளிட்ட அரசுப்பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளின் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று கூறினார்.
