Home
You Are Here: Home » News » ஓட்டுபோட விடாமல் ரவுடிகள் தடுத்ததால் மீனவ மக்கள் சாலைமறியல்

ஓட்டுபோட விடாமல் ரவுடிகள் தடுத்ததால் மீனவ மக்கள் சாலைமறியல்

புது‌ச்சேரி வீராம்பட்டினத்தில் ஓட்டுபோட விடாமல் ரவுடிகள் தடுத்ததால் மீனவ மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

புது‌ச்சேரி மக்களவை தொகுதியில் உள்ள 905 வாக்குசாவடிகளில் 88 வாக்குசாவடிகள் பதட்டமானவை என கண்டறியபட்டுள்ளது‌. போலீசாரும் பாது‌காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் காலை 7மணி முதலே மிகுந்த ஆர்வமாக வாக்களித்து‌ வருகின்றனர்.

இந்நிலையில் புது‌வை புறநகர் பகுதியான வீராம்பட்டினத்தில் மீனவ மக்களை ஓட்டுபோட விடாமல் ரவுடிகள் தடுத்து‌ மிரட்டி உள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது‌ போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏறபட்டது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top