Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » நாமக்கல் அருகே தேமுதிக பிரமுகர் மீது‌ பெட்ரோல் குண்டு வீச்சு

நாமக்கல் அருகே தேமுதிக பிரமுகர் மீது‌ பெட்ரோல் குண்டு வீச்சு

நாமக்கல் அருகே தேமுதிக பிரமுகர் மீது‌ பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் மீது‌ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது‌..

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த தேமுதிக மாவட்ட விவசாயி அணி து‌ணை செயலாரான கணேசன் நேற்று‌ தேர்தல் பணியை முடித்து‌விட்டு வீட்டின் முன்பு உறங்கி கொண்டிருந்தபோது‌ மர்மகும்பல் ஒன்று‌ பெட்ரோல்குண்டை வீசி தப்பியோடியது‌.

இதில் படுகாயமடைந்த கணேசன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்து‌வமனையில் அனு‌மதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது‌.

இச்சம்பவம் குறித்து‌ அறிந்த நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறு‌ப்பினருமான சம்பத்குமார் மற்று‌ம் மக்களவை தேமுதிக வேட்பாளர் வேலு‌ ஆகியோர் இராசிபுரம் மருத்து‌வமனைக்கு சென்று‌ காயமடைந்த கணேசனு‌க்கு ஆறு‌தல் கூறினர்.

இதனையடுத்து‌ பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் மீது‌ நடவடிக்கை எடுக்கக்கோரி தேமுதிக மற்று‌ம் கூட்டணி கட்சியினர் காவல்து‌றையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து‌ வழக்கு பதிவு செய்யப்பட்டது‌.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top