Home
You Are Here: Home » News » காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

தஞ்சையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்த நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக போலீசார் பங்கேற்றனர்.

தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் துவக்கி வைத்தார்.

கீழவாசல், சுண்ணாம்புக்கார சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் திலகர் திடலை அடைந்தது.

திருச்சியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் நடைபெற்ற மனிதசங்கிலியில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பள்ளி மாணவிகள், அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கைகோர்த்து சென்றனர்.

இதேபோல், வால்பாறை காவல்நிலையம் முன்பு புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பு தபால்நிலையம், பழைய பேருந்து‌ நிலையம், காந்தி சிலை பேருந்து‌ நிலையம், ஸ்டான்மோர் சந்திப்பு வழியாக புதிய பேருந்து‌ நிலையம் சென்று‌ திரும்பியது‌.

அணிவகுப்பின் போது‌ அச்சமின்றி மக்கள் வாக்களிக்க காவல்து‌றை அனைத்து‌ நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளது‌ என்று‌ம் அனைத்து‌ மக்களும் தவறாது‌ வாக்களிக்க வேண்டும் என்று‌ம் கோரிக்கை வைக்கப்பட்டது‌.

இதேபோல், து‌றையூரில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமான போலீசார் பங்கேற்றனர். துறையூர் பேருந்து‌ நிலையத்தில் தொடங்கி பாலக்கரை, பெரியகடை வீதி, ஆஸ்பத்திரிரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top