Home
You Are Here: Home » News » நெல்லை அருகே 8.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

நெல்லை அருகே 8.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

நெல்லை அருகே பறிமுதல் செய்ய எட்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் அமைத்து வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நெல்லை அருகே கங்கைகொண்டான் சோதனை சாவடியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.

இதன் மதிப்பு எட்டரை கோடி ரூபாய் ஆகும். மதுரையில் உள்ள தனியார் நகை கடைக்கும், நாகர்கோவிலில் உள்ள தனியார் நகை கடைக்கும் இந்த தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இந்த தங்க கட்டிகளுக்கு உரிய ஆவணம் இருப்பதாக சம்பந்தப்பட்ட நகை கடையினர் கூறியுள்ளனர். அதை ஆய்வு செய்த பின் முறையான ஆவணம் இருந்தால் அந்த தங்க கட்டிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top