Home
You Are Here: Home » News » தாராபுரம் அருகே கிராம மக்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்

தாராபுரம் அருகே கிராம மக்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே உள்ள மருதூர் ஊராட்சிக்குட்பட்ட கள்ளிப்பாளையம் நாவலிங்கபுரம் நெச்சிப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பாடாததைக் கண்டித்தும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் நிறைவேற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மருதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில்ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top