Home
You Are Here: Home » News » சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் படுகாயம்

சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் படுகாயம்

திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில் அதிகாலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகரை சேர்ந்த சுடலைமணி-செல்வராணி தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் உள்பட 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை மாத்திரை சாப்பிடுவதற்காக செல்வராணி வீட்டில் சமையலறையில் வென்னீருக்காக கேஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் செல்வராணி, அவரது மகன் வேல்முருகன், மகள் ஜானகிதேவி, செல்வராணியின் தாயார் இசக்கியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் சுடலைமணி லேசான காயத்துடன் உயிர்தப்பினார். காயமடைந்த அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலிண்டர் தானாக வெடித்ததா? அல்லது சுடலைமணியின் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top