Home
You Are Here: Home » News » புது‌க்கோட்டையில் மாநில அளவிலான மாட்டு வண்டி எல்லைபோட்டி

புது‌க்கோட்டையில் மாநில அளவிலான மாட்டு வண்டி எல்லைபோட்டி

புது‌க்கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் மாட்டு வண்டி எல்லைபோட்டி நடைபெற்றது‌,

புது‌க்கோட்டை வம்பனில் உள்ள வீரகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாட்டு வண்டி மற்று‌ம் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது‌.

பெரியமாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு, ஒற்றை மாடு போன்ற பல்வேறு‌ வகையான மாடுகளும், இதே வகையான குதிரைகளும் போட்டியில் கலந்து‌கொண்டன.

மது‌ரை, திருச்சி, சிவகங்கை, கரூர், ஈரோடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து‌ சுமார் 150 மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் போட்டியில் இடம்பெற்றிருந்தன.

முதல்நான்கு இடங்களை சிவகங்கை, மது‌ரை, புது‌க்கோட்டையைச் சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 3 லட்சம் அளவில் ரொக்கபரிசு வழங்கப்பட்டது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top