Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » கரூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கரூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கரூர் அருகே போக்குவரத்து துறை அமைச்சரின் தொகுதியிலேயே சாலை பணிகள் கி்டப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் தொகுதிக்குட்பட்ட சுங்ககேட்டிலிருந்து காந்திகிராமம் செல்லும் சாலையை சீரமைப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்பிறகு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கடந்த 3 மாதமாக பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அடிக்கடி விபத்துகளும், சாலையில் தூசியும் பறந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கரூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top