Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

நாமக்கல்லில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

அங்குள்ள நவவோதயா பள்ளி மைதானத்தில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியி்ல ஒப்பன் செட் முறையில் தமிழகம் முழுவதும் இருந்து 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் 6 வயது முதல் 14 வயது வரையுள்ள பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

டைம் ரன்னர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 28 போட்டிகள் நடத்தப்பட்டு 282 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்கள் தேசிய மற்றும் ஆசிய அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று ஸ்கேட்டிங் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் ஆணையத்துடன் பள்ளி நிர்வாகம் நடத்தும் முதல் சாம்பியன்ஷிப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top