Home
You Are Here: Home » Cinema » ஹாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மிக்கி ரூனி மரணம்

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மிக்கி ரூனி மரணம்

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மிக்கி ரூனி மரணமடைந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிகை எலிசபெத் டெய்லருடன் நடித்த அவர், 8 பெண்களை மணந்து 93 வயது வரை வாழ்ந்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்தி, நகைச்சுவை நடிகராக திகழ்ந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் மிக்கி ரூனி. 1930ம் ஆண்டு வெளியான ஆன்டி ஹார்டி படத்தொடர்கள், மற்றும் 1935ல் வெளியான மிட்சம்மர் ட்ரீம் ஆகிய படங்கள் மிக்கி ரூனிக்கு பெரும் புகழை தேடித்தந்தன. தனது 13வது வயதில் அதே வயதுடைய பிரபல கவர்ச்சி நடிகை எலிசபெத் டெய்லருடன் குழந்தை ந்ட்சத்திரமாக நடித்துள்ளார். அவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால் ரசிகர்கள் மனதில் மிக்கி ரூனி நீங்கா இடம்பெற்றார்.

200க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள மிக்கி ரூனி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த போதிலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துயரமானதாகும். திரைப் படங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை இழந்த அவர், தனது இல்லற வாழ்க்கையில் 8 மனைவிகளை திருமணம் செய்து பிரிந்தவர். கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம், தனது கடைசி மனைவியை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top