Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » கரூரில் வங்கிப்பெண் ஊழியர் கொலை

கரூரில் வங்கிப்பெண் ஊழியர் கொலை

கரூரில் வங்கிப்பெண் ஊழியர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த மர்மக்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் தனியார் வங்கியில் கேசியராக பணியாற்றி வந்தவர் ரூபா. இளம்பெண்ணான இவர் கரூர் காந்திபுரம் நடுத்தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் வீ்ட்டின் உரிமையாளர் தண்ணீருக்காக மோட்டார் போடுவதற்காக மாடிக்கு சென்றபோது, ரூபா வீட்டில் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவல்அறிந்த கரூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top