Home
You Are Here: Home » News » கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3-வயது சிறுமி பலி

கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3-வயது சிறுமி பலி

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துழை கிணற்றில் விழுந்த 3-வயது சிறுமி சுமார் 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை தம்பதியின் 3 வயது மகள் மதுமிதா. தந்தை ராமச்சந்திரனுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்ற மதுமிதா, அங்கு விளையாடி கொண்டிருந்தபோது, 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்‍. தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி தொடங்கியது. இதனிடையே சிறுமிக்கு மூச்சி திணறல் ஏற்படாமல் இருக்க கிணற்றில் ஆக்சிஜன் வாயுவும் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், சுமார் 16 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மதுமிதாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. சிறுமி மதுமிதா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top