Home
You Are Here: Home » News » விவசாயிகளுக்கு சிறப்பு விவசாய மண்டலம் அமைக்கப்படும் – கேப்டன் விஜயகாந்த்

விவசாயிகளுக்கு சிறப்பு விவசாய மண்டலம் அமைக்கப்படும் – கேப்டன் விஜயகாந்த்

விவசாயிகளுக்கு சிறப்பு விவசாய மண்டலம் அமைத்து, அதிக லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேப்டன் விஜயகாந்த் உறுதியளித்துள்ளார்..

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தினேஷ்குமாரை ஆதரித்து, கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூர், அந்தியூர், பவானி உள்ளிட்ட இடங்களில் கேப்டன் விஜயகாந்த் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.. முதல் கூட்டணி வெற்றி கூட்டணி மக்கள் கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று தனது உரையை தொடங்கிய கேப்டன், வேட்பாளர் தினேஷ்குமாருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்..

மேட்டூர் உபரிநீர் திட்டம் கண்டிப்பாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேப்டன் நம்பிக்கை தெரிவித்தார்.. அந்தியூரில் மலைவாழ் மக்களுக்கு ஜாதிசான்றிதழ் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய கேப்டன், மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.. காட்டு யானைகளால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேப்டன் வேதனை தெரிவித்தார்..

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய என்ற நோக்கத்துடன் அனைவரும் ஒரணியில் இணைந்து இருப்பதாக குறிப்பிட்ட கேப்டன், பவானியில் தடுப்பணைகள் கட்டி மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.. பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய முதலமைச்சரே, 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் விற்பதாகவும் கேப்டன் குற்றம்சாட்டினார்..

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரண பணத்தை கொள்ளையடித்த, அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேப்டன் கேள்வி எழுப்பினார்.. பிரச்சாரத்தின் நடுவே வேடபாளர் தினேஷ்குமாரை அறிமுகம் செய்து வைத்த கேப்டன், முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்..

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்காத ஜெயலலிதா, எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் கேப்டன் குற்றம்சாட்டினார்.. மின்சாரம் வழங்க வேண்டிய மாநில அரசே, மின்சாரத்தை திருடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கேப்டன் புகார் தெரிவித்தார். மக்களை உதாசினம் செய்த ஜெயலலிதாவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கேப்டன் கேட்டு கொண்டார்..

மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறும் ஜெயலலிதா தற்போது, பலகோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்று கேப்டன் கேள்வி எழுப்பினார்.. விவசாயிகளுக்கு சிறப்பு விவசாயம் மண்டலம் அமைத்து தருவதாக கூறிய கேப்டன், அதன்மூலம் விவசாய பயிர்களை நல்ல விலையில் கொள்முதல் செய்து, விவசாயிகள் அதிக லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததார். 15 வருடங்களுக்கு முன்பு வறட்சி மாநிலமாக இருந்த குஜராத்தை முதலமைச்சர் நரேந்திரமோடி, வளர்ச்சி மாநிலமாக மாற்றியதாக கேப்டன் பெருமிதம் தெரிவித்தார்..

முன்னதாக பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரனை ஆதரித்து கேப்டன் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனைமலை நல்லாறு‌, பாண்டியாறு, ‌குன்னம்பளம் ஆகிய திட்டங்களை அதிமுக திமுகவும் கிடப்பில் போட்டுள்ளதாக கேப்டன் குற்றம்சாட்டினார். அவிநாசி – அத்திகடவு கூட்டுக்குடிநீர் திட்டம் என்னவாயிற்று‌ என்று‌ கலைஞரிடம் மக்கள் கேட்க வேண்டும் என்று‌ம் கேப்டன் வலியுறு‌த்தினார்.

ஜெயலலிதாவின் செய்வீர்களா, செய்வீர்களா என்ற வசனத்தை விமர்ச்சித்த கேப்டன், முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து‌, மின்சாரம், வேலைவாய்ப்பு, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றை செய்வீர்களா என்று‌ மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று‌ கேப்டன் குறிப்பிட்டார். குடிநீர் வழங்ககோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும்கட்சி அமைச்சர்களை மக்கள் விரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் பிரசாரத்தை முன்னிட்டு, பேருந்து‌ வசதிகள் அனைத்து‌ம் தடைபட்டுள்ளதாக குறிப்பிட்ட கேப்டன், மக்களை இந்த அளவுக்கு சிரமப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் என்று‌ கேள்வி எழுப்பினார். 2ஜி விவகாரத்தில் மாபெரும் ஊழலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு, மீண்டும் சீட் கொடுத்ததன் மூலம் அக்கட்சி ஊழல் கட்சி என்பது ‌உறு‌தியாகியுள்ளதாக கேப்டன் குற்றம்சாட்டினார்.

இந்தியா வல்லரசாகவும்,, தமிழ்நாடு நல்லரசாகவும் நரேந்திரமோடி பிரதமராக வரவேண்டும் என்று குறிப்பிட்ட கேப்டன், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார்..

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top