Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » அன்புமணி ராமதாஸ் பிரச்சார வேன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

அன்புமணி ராமதாஸ் பிரச்சார வேன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

தருமபுரி மக்களவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் பிரச்சார வேன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்‍.

இதனை தொடர்ந்து சந்தப்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் செய்வதற்காக அன்புமணி ராமதாஸ் வேனில் சென்றுகொண்டிருந்தார். வேன் பெத்தூர் கிராமம் அருகே சென்று‌கொண்டிருந்தபோது‌ மர்ம நபர்கள் சிலர் பிரச்சார வாகனத்தின் மீது‌ கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது‌. இதனைக் கண்டித்த பாமகவினர் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்‍. இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்‍.

இச்சம்பவத்தால் அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் பாது‌காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top