Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து‌ கேப்டன் விஜயகாந்த் பிரசாரம்

திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து‌ கேப்டன் விஜயகாந்த் பிரசாரம்

திண்டுக்கல் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து‌கேப்டன் விஜயகாந்த் கொடைக்கானலில் இன்று‌பிரசாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் பிற்பகலில் பிரசாரத்தை தொடங்கிய கேப்டன், ஆளும் அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மை மற்று‌ம் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை ஆகியவற்றை பட்டியலிட்டார்.

டாஸ்மாக் கடைகளை திறந்து‌வைத்து‌மக்களை வாட்டி வதைக்கும் ஜெயலலிதா அரசு, அம்மா உணவகங்களை திறந்து‌வைத்து‌மக்களை சோம்பேறிகளாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பிற்பகல் 3 மணிக்கு தேனியில் ம.தி.மு.க.வேட்பாளர் அழகுசுந்தரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

இதனையடுத்து, வத்தலக்குண்டு, கன்னிவாடி மற்றும் ஒட்டன் சத்திரம் ஆகிய இடங்களில் திண்டுக்கல் மக்களவை தொகுதி தே.மு.தி.க.வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிரசாரத்திற்கு வரும் கேப்டன் விஜயகாந்தை வரவேற்க தே.மு.தி.க.மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top