Home
You Are Here: Home » News » திருப்பூரில் வாக்கு சேகரிக்க சென்ற மேயர் மற்றும் அதிமுக அமைச்சரை பொதுமக்கள் விரட்டியடிப்பு

திருப்பூரில் வாக்கு சேகரிக்க சென்ற மேயர் மற்றும் அதிமுக அமைச்சரை பொதுமக்கள் விரட்டியடிப்பு

திருப்பூரில் வாக்கு சேகரிக்க சென்ற மேயர் மற்றும் அதிமுக அமைச்சரை பொதுமக்கள் விரட்டியடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, மாநகர மேயர் விசாலாட்சி மற்றும் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது கிராம மக்கள் அவர்களை வாக்கு சேகரிக்க விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்து அவர்களை விரட்டியடித்தனர்..

கடந்த 6மாதங்களுக்கு மேலாக சாக்கடை எடுக்கப்படாததால் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத அதிமுக மேயர் விசாலாட்சி, தற்போது எந்த முகத்தோடு வந்து வாக்கு சேகரிக்கிறார் என்று பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர்.. தேர்தல் நேரத்தின்போது, வாக்கு சேகரிக்க வரும் அதிமுகவினர், தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு மக்களை மறந்துவிடுவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்..

இத்தனை ஆண்டுகளாக தெருவிளக்குகள் எரியாததால் பெரும் சிரமத்திற்கு ஆளானதாகவும்,, ஆனால் இன்று மேயர் வாக்கு சேகரிப்பதை முன்னிட்டு அனைத்து தெருவிளக்குகளும் எரிவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்..

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top