Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லை அடுத்த பொட்டி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயம் பார்த்து வந்த இவர், மனைவி வளர்மதி மற்றும் பிள்ளைகளுடன் தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே வசித்தனர்.

இதில் மகள் பிரியா பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். மகன் சரத்குமார் பிளஸ்-1 படித்து வந்தார். வழக்கமாக காலை 4 மணிக்கு பால் கறக்கும் தொழிலாளர் இவர்களது வீட்டுக்கு வந்து கதவை தட்டுவார். ஆனால் இன்று காலை பால் கறக்க வந்தவர் கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை. இதனால் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்த போது வீட்டுக்குள் 4 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

4 பேர் தற்கொலை செய்த தகவல் அறிந்த கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அவர்களது பிணத்தை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. ஒரே குடும்பத்தை 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பொட்டி ரெட்டிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

இது குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடலையும் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top