Home
You Are Here: Home » News » ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து

ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜெராக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.

அறந்தாங்கி தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை செயல்பட்டு வந்தது. வழக்கம் போல இரவில் கடையை அடைத்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ஜெராக்ஸ் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். முன்விரோதம் காரணமாக தமது ஜெராக்ஸ் கடைக்கு தீ வைக்கப்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்‍.

இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த ஜெராக்ஸ் இயந்திரங்கள் மற்றும் காகிதங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 6 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அதன் உரிமையாளர் பாவாடை தெரிவித்துள்ளார்‍.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top