Home
You Are Here: Home » News » தஞ்சை பெரிய கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தஞ்சை பெரிய கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பாரம்பரிய சின்னமாக திகழும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக விளங்குகிறது‌.

இந்நிலையில், தீவிரவாதிகளின் அச்சுறு‌த்தல் காரணமாக, கோவிலின் பாது‌காப்பு கருதி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கேரளந்தகன் கோபுரம்‌, ராஜராஜன் திருவாயில்‌, திருச்சுற்று மாளிகை, மகாமண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவிலின் காவல் கட்டுப்பாட்டு அறை, தொல்லியல் துறை அலுவலகம்‌ உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் கண்காணிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டுள்ள இந்த 31 கேமராக்களும் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள நிகழ்கவுளை துல்லியமாக படம்பிடித்துக் காட்டும் திறன் கொண்டது‌. இன்னு‌ம் சில தினங்களில் இது‌ நடைமுறைக்கு வரும் என்று‌ கூறப்படுகிறது‌.

—————

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top