Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » சிதம்பரம் தேமுதிக நி்ர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் தேமுதிக நி்ர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் தொகுதியில் வரும் 25ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, பிரமாண்டமான முறையில் வரவேற்பது என அரியலூர் அருகே நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழுர், ஆண்டிமடம் மற்றும் செந்துரை ஒன்றிய தேமுதிக நி்ர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய மாவட்ட கழக செயலாளர் இராம.ஜெயவேல், வரும் 25ம் தேதி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தரும் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவேண்டும் என்றும், இத்தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் கோபியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கூ்ட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top