Home
You Are Here: Home » News » India » இத்தாலிய கடற்படை வீரர்கள் விடுவிக்கக் கூடாது – கேரள அரசு எதிர்ப்பு

இத்தாலிய கடற்படை வீரர்கள் விடுவிக்கக் கூடாது – கேரள அரசு எதிர்ப்பு

கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடைய இத்தாலிய கடற்படை வீரர்களை, ஐ.நா. சபை தலையிட்டாலும் விடுவிக்கக் கூடாது என்று கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி பிரதமருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், “கேரளத்தையொட்டிய கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தக்கூடாது என அந்நாட்டு அரசு நெருக்கடி அளித்துவரும் நிலையில்,. ஐநா சபை இந்த விவகாரத்தில் தலையிட்டாலும் அதற்கு மத்திய அரசு சம்மதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் போக்கை கேரள மக்கள் உன்னிப்பாக கவனித்துவருவதால், முறையான விசாரணைக்கு உட்படுத்தாமல் இத்தாலிய வீரர்களை விடுவித்தால் மக்களுக்கு சட்டத்துறை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். என்றும் உம்மன் சாண்டி தமது கடிதத்தி்ல் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top