Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் கரூர் தொகுதி

கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் கரூர் தொகுதி

மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய நரேந்திரமோடி பிரதமராக வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டிய கேப்டன்,அதிமுக அரசின் மின்சார தடையால் ஜவுளி உற்பத்தி மற்றும் விசைதறி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் வேலை வாய்ப்பில்லாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.

அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளை அதிக அளவில் நடந்து வருவதாக குற்றம்சாட்டிய கேப்டன், மணல் அள்ளியதாக மாட்டு வண்டிகளை மட்டும் பிடிக்கும் காவல்துறையினர், அதிமுக பிரமுகர்கள் லாரி லாரியாக மணல் கடத்துவதை தடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதற்கு கடும் கண்டனம தெரிவித்தார்.

வாஜ்பாய் ஆட்சியை 13 மாதங்களில் கலைத்த ஜெயலலிதா, தற்போது பிரதமர் கணவு கண்டு வருவதாவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாசப்படுத்திய ஜெயலலிதா ஒட்டு மொத்த இந்தியாவையும் சீர்குலைக்க முயல்வதாக ஆவேசம் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்கு சாலை வசதியோ பேருந்து வசதிகளோ என எதுவும் செய்து கொடுக்காததால் மக்கள் அவதிப்பபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை தீர்க்க ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கேப்டன் புகார் தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காமல் அதிமுகவும் திமுகவும் மக்களை ஏமாற்றி வருவதாக கேப்டன் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.. இதனால் மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேப்டன் வேண்டு கோள்விடுத்தார்.

அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் பெயரில் எந்த திட்டத்தையும் ஜெயலலிதா தொடங்காதது ஏன் ஏன்று கேப்டன் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பாலியல் வன்கொடுகளை அதிக அளவில் நடந்து வருவதாகவும் கேப்டன் குற்றம்சாட்டினார். கேப்டன் டிவியை ஒளிபரப்ப கோடி கணக்கில் லஞ்சம் கேட்பதாக கேப்டன் பரபரப்பு புகார் தெரிவித்தார்..

இதை தொடர்ந்து ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டிய கேப்டன் விஜயகாந்த், அதிமுக அரசின் அவலங்களையும் நிர்வாக சீர்கேடுகளையும் பட்டியலிட்டு பேசினார். மஞ்சலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார் வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு முன்வரவில்லை என்று கேப்டன் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அதிமுகவுக்கும், திமுகவும் இந்த முறை வாக்களிக்க கூடாது என்று கேட்டு கொண்டார்..

கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுகொண்ட கேப்டன், மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்கள் விரோத ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி என்று குறிப்பிட்ட கேப்டன், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டால் தொழில்கள் முடங்கியுள்ளதாக கூறினார். இதனால் தொழிலாளர்களும், உரிமையாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கேப்டன் வேதனை தெரிவித்தார்..

முன்னதாக ஈரோட்டிற்கு வருகைபுரிந்த கேப்டனுக்கு கழகத்தினர் சார்பிலும் கூட்டணி கட்சியினர் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top