Home
You Are Here: Home » News » சூரியனுக்கு மிக அருகில் பூமி செல்லும் நிகழ்வு

சூரியனுக்கு மிக அருகில் பூமி செல்லும் நிகழ்வு

புத்தாண்டு தொடக்கத்தின் அதிசய நிகழ்வான பூமி, சூரியனுக்கு மிக அருகில் செல்லும் அதிசய நிகழ்வு, இன்று காலையில் நடைபெறுகிறது.

கோள்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், ஒவ்வொரு கோளும், சூரியனுக்கு மிக அருகிலும், மிக தொலைவிலும் செல்லும் நிகழ்வுகள் நடைபெறும்.பூமி சூரியனுக்கு மிக அருகில் செல்லும் நிகழ்வு ஜனவரியிலும், மிகத் தொலைவில் செல்லும் நிகழ்வு ஜூலை மாதத்திலும் நடைபெறும். இன்று காலையி்ல் சூரியனுக்கு அருகில் பூமி செல்லும். அப்போது, 14.7 கோடி கி.மீ. இடைவெளியில் சூரியனை பூமி கடந்து செல்லும். அதே போன்று நடப்பாண்டு ஜூலை 5ஆம் தேதி, பூமி, சூரியனில் இருந்து மிக அதிக தொலைவில் இருக்கும் நிகழ்வு நடைபெறும். சூரியனுக்கு மிக அருகில் சென்றாலும், தட்பவெப்ப நிலையில் மாற்றம் இருக்காது. வெப்பமோ, குளிரோ, புவியின் சாய்வச்சுக் கோணத்தைப் பொருத்தே நிகழ்கின்றன. சூரியனுக்கு அருகில் இருப்பதைப் பொருத்து அல்ல. எனவே, சூரிய ஒளி அதிகமாகக் கிடைத்த போதும் அதிக வெப்பமாக உணர மாட்டோம் என்று புதுடெல்லியில் உள்ள இந்திய கோளக சங்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top