Home
You Are Here: Home » News » குரூப் 1 தேர்வில் புதிய மாற்றம்

குரூப் 1 தேர்வில் புதிய மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 1 தேர்வு முறையில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசு தேர்வு வாரிமான டி.என்.பி.எஸ்.சி மூலம் நடைபெறும் முதல்நிலை தேர்வில், ‘ஆப்டிடியூட்’ என்ற புதிய பாடமும், மெயின் தேர்வு பொது அறிவு தாளில் ஆங்கில பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆப்டிடியூட் என்பது ஒருவரின் சிந்தனைத் திறன், பொது விழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன் சம்பந்தப்பட்டது ஆகும். பொதுஅறிவில் கேள்விகள் 150 ஆக குறைக்கப்பட்டு எஞ்சிய 50 கேள்விகள் ‘ஆப்டிடியூட்’ பாடத்தில் இருந்து கேட்கப்பட உள்ளது. மெயின் தேர்வில் கூடுதலாக 300 மதிப்பெண்ணுக்கு பொது அறிவு தாள் ஒன்று புதிதாக சேர்க்கப்படுகிறது. அத்துடன் பொதுஅறிவில் ஆங்கில பாடமும் இடம்பெறுகிறது. விண்ணப்பதாரரின் ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் வகையில் இதில் கேள்விகள் கேட்கப்பட உள்ளது. மெயின் தேர்வில் புதிதாக 300 மதிப்பெண்ணுக்கு கூடுதலாக ஒரு தாள் சேர்க்கப்பட்டு இருப்பதால் மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 600-லிருந்து 900 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது, நேர்முகதேர்வுக்கு 80 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஆக அதிகரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு வரும் 27 ந் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 7 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

About The Author

Number of Entries : 5539

Comments (7)

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top