Home
You Are Here: Home » News » India » பா‌.ஜ.க., மகளிர் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம்

பா‌.ஜ.க., மகளிர் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம்

டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழந்த மாணவி குறித்து மத்திய அமைச்சர் சசி த‌ருர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி ‌உள்ளது.

இதுதொடர்பாக அவர் தமது டிவிட்டர் வலைதளத்தில், பாலியல் கொடுமைக்கு ஆளான 23 வயது இளம் பெண்ணின் முழு அடையாளத்தையும் வெளியிட வேண்டும் என்ற குறிப்பிட்டுள்ளார். பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த பெண் யார்?, என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் ‌அவரது பெற்றோரின் சம்மதத்துடன் வெளியிட வேண்டும் என்றும் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாலியல் கொடுமைக்கு எதிராக கொண்டு வரப்படும் புதிய சட்டத்திற்கு, அம்மாணவியின் பெயரை வைக்கலாம் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது அம்மாணவிக்கு நாம் செலுத்தும் கவுரவம் என்றும் அவர் கூறியுள்ளார். சசி தரூரின் இக்கருத்திற்கு தேசிய மகளிர் கமிஷன், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு‌ சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், மத்திய அமைச்‌சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தமது நிலையறிந்து கருத்து கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தை சசி தரூர் திசை திருப்ப தேவையில்லை என்றும் உசேன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு கொண்டு வரப்படும் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top