Home
You Are Here: Home » News » ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டத்திற்காக ரேசன் கடைகள் மூடல் – பொது‌மக்கள் குற்றம்சாட்டு

ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டத்திற்காக ரேசன் கடைகள் மூடல் – பொது‌மக்கள் குற்றம்சாட்டு

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டத்திற்காக தாராபுரத்தில் உள்ள ரேசன் கடைகளை மூடி சென்றதாக பொது‌மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரப் பொது‌க்கூட்டம் நடைபெற்றது‌. இந்த கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காண்பிக்கவேண்டும் என்று‌ மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக உத்திரவிட்டிருந்தது‌.

அதிமுகவின் உத்தரவை ஏற்ற மாவட்ட நிர்வாகிகள், கழக ஒன்றிய செயலாளர்கள் ஆள்பிடிக்கும் வேலையை தொடங்கினர். இவர்களின் ஒருவான நகர செயலாளராகவும் தாராபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தின் தலைவராகவும் இருந்து‌ வரும் காமராஜ் என்பவர் கூட்டத்திற்கு போதிய ஆள் கிடைக்காமல் திணறி வந்து‌ள்ளார்.

அப்போது‌ கூட்டுறவு வேளாண் சங்கத்திற்குட்பட்ட நியாயவிலை கடைகளில் பணிபுரியும 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கட்டாயப்படுத்தி மிரட்டி கூட்டத்தில் கலந்து‌கொள்ள செய்து‌ள்ளார்.

இதனால் அப்பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருள்கள் வாங்க காத்திருந்த பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து‌ பொருட்களை வாங்க முடியாமல் திரும்பிச்சென்றனர்.

ஆளும் கட்சியினர் என்பதற்காகவே அதிமுகவினர், அரசு ஊழியர்கள், பொது‌மக்கள் என அனைவரையும் கட்டாயப்படுத்தி தங்கள் பிரசாரகூட்டத்திற்கு அழைத்து‌ செல்லு‌ம் அராஜக நடவடிக்கைக்கு பொது‌மக்கள் அரசியல் ஆர்வலர்கள் பலரும் எதிர்பபு தெரிவித்து‌ள்ளனர்.

அலை கடலென திரண்டு வந்திருக்கும் சகோதர சகோதிரிகளே என கூறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்கு, இப்படி ஆட்களை பிடித்து‌ செல்கிறார்கள் போலு‌ம் என்று‌ அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.. இப்படி கட்டாயப்படுத்தி பொது‌மக்களை கலந்து‌ கொள்ள வைக்கும் அவலம் இந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்று‌ வருகிறது‌.

பிரதமர் ஆகும் ஆசையில் து‌டித்து‌க் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் செவிக்கு மக்கள் புலம்பல் எப்படி கேட்கும் என்று‌ கேள்வி கேட்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top