Home
You Are Here: Home » News » அறந்தாங்கி அருகே வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

அறந்தாங்கி அருகே வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலு‌க்கு இது‌வரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்‍.

அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு வைரஸ் காய்ச்சல் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கிராமத்தி்ல் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்குடி கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்‍.

வேகமாக பரவி வரும் காய்ச்சல் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று முக்குடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்‍. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்‍.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top