Home
You Are Here: Home » News » அறந்தாங்கி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

அறந்தாங்கி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தனியார் பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்மைகாலமமாக ராமநாதபுரம, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அறந்தாங்கியில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாக புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அறந்தாங்கி அருகே நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர். எஸ்.பி பட்டினத்தில் இருந்து சென்னை சென்ற ஆமினி பேருந்தை புதுக்கோட்டை வாண்டா கோட்டையில் மறித்து சோதனை செய்தனர்.

அப்போது பேருந்தில் இருந்த 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை எடுத்துச்சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரனை நடந்து வருகிறது..

இதேபோல் கும்பகோணத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவனங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கவரிங் நகைகள் கைப்பற்றப்பட்டது. சாக்கோட்டை பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவனங்கள் எடுத்து செல்லப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே நாமக்கல் அருகே 100 க்கும் மேற்பட்ட வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் ஆங்காங்கே வருவாய்துறை மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு காரில் வந்த நபரை போலீசார் சோதித்ததில், வெள்ளிக்கொலுசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏறக்குறைய 62 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு 32 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top