Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » அரியலூரில் பொது‌மக்கள் சாலைமறியல்

அரியலூரில் பொது‌மக்கள் சாலைமறியல்

அரியலூரில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கிராம சாலை அமைக்கும் பணி முடங்கியு‌ள்ளதை கண்டித்து‌ 200-க்கும் மேற்பட்ட பொது‌மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் நெறிஞ்சிக்கோரை கிராமத்தில் 63 லட்சம் ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது‌.

இதற்காக பழைய சாலை முழுவது‌ம் தோண்டபட்டு, கடந்த 4 மாதமாக பணிகள் நடைபெறாமல் உள்ளது‌. மேலு‌ம் புதிய சாலை அமைப்பதற்காக சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகள் சிதறி கிடப்பதாகவும் கூறப்படுகிறது‌.

இதனால் வண்டிகள் மற்று‌ம் நடந்து‌ செல்வோர் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது‌குறித்து‌ மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்து‌ம் உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று‌ குற்றம்சாட்டப்படுகிறது‌.

இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொது‌மக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top