Home
You Are Here: Home » News » திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீது மோசடி புகார்

திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீது மோசடி புகார்

கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் மீது மாவட்ட காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்‍.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த கஸ்தூரி நாகராஜன் என்பவர் இருந்து வருகிறார்‍. இவரது கணவரும் கூட்டுறவு சங்க தலைவருமான நாகராஜன் என்பவர் மதுரையை சேர்ந்த செல்வம் என்பவருக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 2 கடைகளை வாடகைக்கு தருவதாக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பணமாக 5 லட்சம் ரூபாயை செல்வம் கொடுத்துள்ளதாகவும்‌, பணத்தை பெற்றுக்கொண்டு 6 மாதங்கள் கடந்தும் இதுவரை கடைகள் தரவில்லை என்று கூறப்படுகிறது. பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் செல்வம் புகார் தெரிவித்துள்ளார்.

கடைகள் பெற்று தருவதாக கூறி தங்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்வம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்‍. 5 லட்ச ரூபாயை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top