Home
You Are Here: Home » News » கஞ்சா கடத்திய பெண் கைது

கஞ்சா கடத்திய பெண் கைது

தேனியிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்‍.

மாப்பிள்ளையூரணி விளக்குப் பகுதியில் கஞ்சா கடத்துவதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்ததுள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர்‌, மதுரையிலிருந்து தூத்துக்குடி வந்த பேருந்தில் பையுடன் இறங்கிய ஒரு பெண்ணை விசாரித்தனர்‍.

விசாரணையில் அந்த பெண் 2 கிலோ எடை கொண்ட 430 பாக்கெட்டுகளை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இந்த கஞ்சா பாக்கெட்டுகள் அனைத்தும் தேனியில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த பெண் மூலம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்‍.

இதனிடையே, திருத்தணி அருகே நிறு‌த்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து‌ 3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது‌.

திருத்தணி அருகே ஆற்காடு குப்பம் பகுதியில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்ட லோடு ஆட்டோவை போலீசார் சோதனையிட்டதில், 3 டன் எடை கொண்ட 42 செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோ டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்‍.
———-

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top