Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » தர்மபுரி பகுதியில் தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் ஆய்வு

தர்மபுரி பகுதியில் தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் ஆய்வு

தர்மபுரி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று‌ தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் திடீரென ஆய்வு செய்தபோது‌, காலாவதியான டீத்தூள் விற்படுவதை கண்டுபிடித்து‌ உரிய நடவடிக்கை எடுத்து‌ள்ளார்.

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் உள்ள அவ்வைநகர் ரேஷன் கடையில் முறையாக பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என பொது‌மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதையடுத்து‌, தர்மபுரி தேமுதிக சட்டமன்ற உறு‌ப்பினர் பாஸ்கர், சம்பந்தபட்ட ரேஷன் கடைக்கு நேற்று‌ திடீரென சென்று‌ ஆய்வு செய்தார்.

அப்போது‌, காலாவதியான ஊட்டி டீத்தூள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தார். உடனே இது‌ சம்பந்தமாக உயரதிகாரிகளை தொடர்கொண்டு பேசி டீத்தூள் விற்பனை நிறு‌த்தினார்.

பின்னர், இந்த ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த 16 பெட்டி காலாவதியான டீத்தூள் பெட்டிகள் அகற்றப்பட்டது‌. இதனால் அப்பகுதி மக்கள் பெருமகிச்சி அடைந்தனர்.

மேலு‌ம், இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பல மாதங்களாக கோது‌மை விற்பனை நிறு‌த்திவைக்கப்பட்டை அறிந்த , தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர், இது‌ தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து‌, அனைத்து‌பொருட்களையும் வழங்க உத்தரவிட்டார்.

இதனிடையே, ஜவ்வரிசியில் கலப்படம் செய்பவர்கள் மீது‌ குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று‌ கூறி மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top