Home
You Are Here: Home » News » தேனி அருகே பேருந்து, லாரி மோதல்

தேனி அருகே பேருந்து, லாரி மோதல்

தேனி அருகே பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில் பெண்கள் உள்பட 17பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. தேனியிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி ஆண்டிப்பட்டி செல்வதற்காக வந்துகொண்டிருந்தது. இந்த இரு வாகனங்களும் தேனியை அடுத்த க.விலக்கு அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உள்பட 17பேர் படுகாயம் அடைந்தனர். அவர்க்ள தேனி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல போடி அருகே உள்ள டி.ஓபுலாபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் இருசக்கர வாகனத்தில் டொம்புச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனம் திடீரென்று நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top