Home
You Are Here: Home » News » Tamil Nadu » Namakkal » விடுதியில் உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்

விடுதியில் உணவு சாப்பிட்ட பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் 60 பேர் உணவு சாப்பிட்டதும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் பணியாற்றிவரும் பெண் தொழிலாளர்கள் விடுதி்யில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் 60 பேர் நேற்று மாலை உணவு சாப்பிட்டதும் மயங்கி விழுந்தனர். வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பள்ளிபாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதுபற்றி திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் செங்கோட்டையன் விசாரணை நடத்தினார். தொழிலாளர் நலவாரிய அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top