Home
You Are Here: Home » News » Tamil Nadu » Karur » கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில்கொள்ளை

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில்கொள்ளை

கரூரில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 38 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் காந்தி கிராமத்தில் உள்ள ஈபி காலனியை சேர்ந்தவர்கள் அஸ்ஸாம்கான்,. ரஹீம்கான். அண்ணன் தம்பியான இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று. திருச்சியில் உள்ள உறவினர் வீட்டி்ல் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்கள் வீட்டைப்பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 38 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இந்த கொள்ளை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top