Home
You Are Here: Home » News » India » ப. சிதம்பரம் கேள்வி

ப. சிதம்பரம் கேள்வி

கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஈடாக பாஜக கட்சியால் எதையாவது கூறமுடியுமா? என மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி விடுத்தார்.

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் எஸ்சி.எஸ்.டி பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஈடாக பாஜக எதையாவது சாதித்தாக கூறமுடியுமா? என கேள்வி விடுத்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்காக வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாய் அதிக நிதி தரப்போவதாகவும், சில விதிகளுடன் இந்த நிதி வழங்கப்பட உள்ளதாகவும் ப.சிதம்பரம் அப்போது குறிப்பிட்டார்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top