Home
You Are Here: Home » News » தேனி அருகே பாராசூட் வீரர்கள் சாகசம்

தேனி அருகே பாராசூட் வீரர்கள் சாகசம்

தேனி அருகே நடைபெற்ற பாராசூட் வீரர்கள் 3 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம் செய்து காட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

தேனி அருகே இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதிகள் உள்ளன., உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு ஏராளமான அளவில் சுற்றுலா வருகின்றனர்.

ஆசியாவிலேய பாராசூட் பயிற்சி செய்து சாகசம் நிகழ்த்த இப்பகுதி மிகவும் ஏற்றதாக உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் காற்று அதிக அளவில் வீசும் என்பதால், உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளிலு‌ம் இருந்து ‌65 வீரர்கள் இந்த ஆண்டு பாராசூட் சாகசத்திற்காக இங்கு வந்துள்ளனர்.

இந்திய கடற்படை, விமானப்படை குழுவினரும் இதில் அடங்குவர். இந்நிலையில், நேற்று 3 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட் வீரர்கள் குதித்தது‌ அனைவரையும் வியக்க வைத்தது‌. இதற்காக தனியாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது‌.

இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருசக்கரவாகனங்கள் மற்று‌ம் கார்கள் ஓட்டும் சாகசங்களும் தேனி மலைப்பகுதியில் காண்போரை வியக்க வைக்கிறது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top