Home
You Are Here: Home » News » அதிமுக பிரமுகர் மீது மோசடி புகார்

அதிமுக பிரமுகர் மீது மோசடி புகார்

திருச்சியை சேர்ந்தவரிடம், கல்வி நிறுவனம் தொடங்க 10 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி அதிமுக பிரமுகர் ஒருவர் தனது நண்பர்கள் 4பேருடன் சேர்ந்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு கல்வி நிறுவனம் தொடங்க பணம் தேவைப்பட்டது. இதையறிந்த பரமத்திவேலூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இளங்கோவனை தொடர்புகொண்டு அவருக்கு தான் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

பின்னர் பிரபாகரன் தனது நண்பர்களான ஆடிட்டர் குமார், மற்றும் முருகன் ஆகியோருடன் இளங்கோவனை அழைத்துக்கொண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் வேங்கை காளிதாஸ் மற்றும் பள்ளத்தூரை சேர்ந்த முருகேசன் செட்டியார் ஆகியோரிடம் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் கடன் வாங்கித் தருவதற்கு டாக்குமெண்ட் செலவுடன் 25 லட்சம் ரூபாய தருமாறு இளங்கோவனிடம் பேரம் பேசி அந்த தொகையை 3 தவணையாக வாங்கியுள்ளனர். ஆனால் கல்வி நிறுவனம் தொடங்க 10 கோடி ரூபாய் தருவதாக வாக்களித்த அவர்கள் கடன் பெற்றுத் தராமல் 3மாதமாக ஏமாற்றி வந்தனர். இதில் சந்தேகம் அடைந்த இளங்கோவன் பணத்தை திருப்பிக்கேட்டதற்கு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த இளங்கோவன் இதுபற்றி சிவக்ங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் அதிமுக பிரமுகர் வேங்கை காளிதாஸ் உள்பட 5பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top