Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » அரியலூரில் மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி நவீன முறை கண்காட்சி

அரியலூரில் மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி நவீன முறை கண்காட்சி

அரியலூரில் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி நவீன முறையில் கண்காட்சி அமைத்து உலக சாதனைக்கு முயற்சி மேற்கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அரியலூர் தனியார் பள்ளிக்கூட மாணவர்கள் இங்குள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் இல்லாத கனவு உலக கண்காட்சியை அமைத்தனர்.

இந்த கண்காட்சியில், மாணவ மாணவிகள் 50 அடி சுற்றளவில் 4 பகுதிகளாக பிரித்துக்கொண்டு, முதல் கால் பகுதியில் மரங்களை பாதுகாப்பது பற்றிய காட்சி அமைப்புகளையும், இரண்டாவது கால் பகுதியில் அட்டைகளால் ஆன 70 வீடுகளை மழைநீர் சேகரிப்புடன் கூடிய காட்சியயையும், 3வது கால் பகுதியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுபாடுகளை விளக்கும் விதமாகவும், 4வது பகுதியில் காற்று மாசுபாடில்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உருவ மாதிரிகளையும் தத்ருபமாக வடிவமைத்துள்ளனர்.

பள்ளிக்குழந்தைகள் உலக சாதனைக்காக அமைத்துள்ள இந்த கனவுலக கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top