Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் சாமி கைது

பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் சாமி கைது

பல்வேறு வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் சாமி உள்பட 5பேரை கொடைக்கானலில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கொடைக்கானலில் கடந்த 2ம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த பாலன் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கொடைக்கானல் வடகவுஞ்சி ஜீவா நகரை சேர்ந்த தினேஷ், கோபு, விஜயகுமார், யோவான் ஆகிய நான்குபேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கொலை வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் சாமியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி மின்னல் வாய்க்கால் சாமி மீது கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 33 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் குற்றவாளிகள் 5பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top