Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » அரியலூரில் கடும் வறட்சி நெற்பயிர்கள் காய்ந்து கருகியது

அரியலூரில் கடும் வறட்சி நெற்பயிர்கள் காய்ந்து கருகியது

அரியலூரில் கடும் வறட்சி காரணமாக நெற்பயிர்கள் காய்ந்து கருகியுள்ள நிலையில்‌, விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்வதுடன் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்‌, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் போதிய மழையின்மை, மின்வெட்டு போன்ற காரணங்களால் ஏற்பட்ட கடும் வறட்சியால், பயிர்கள் அனைத்தும் காய்ந்து கருகி உணவிற்கே பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கண்முன்னே காய்ந்து வருவதை கண்டு விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் ஏரிப்பாசனமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் நெல் வயல்கள் அனைத்தும் காய்ந்து போய் நெல் பயிர்களை, வெறும் பதராக விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இந்த வறட்சி காரணமாக கால்நடை தீவனத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்‌, கால்நடை வளர்ப்பு தொழிலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top